×

மக்கள் நடமாட்டத்தை தடுக்க ரோட்டில் சிங்கங்கள்?என்னய்யா இப்படியெல்லாம் கிளப்பிவிட ஆரம்பிச்சுட்டீங்க

புதுடெல்லி: `‘கொரோனா பரவுது வெளியே வராதீங்கனு எச்சரிக்கை விடுத்தும் கேளாத ரஷ்ய மக்களை கட்டுப்படுத்த, அந்நாட்டில் சாலைகளில் சிங்கங்களை உலாவ விட்டுள்ளார் அதிபர் புடின்’’ என்று ரஷ்யாவைப்பற்றிய ஒரு வீடியோ வைரல் ஆகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. கூடவே கொரோனா பற்றிய பல்வேறு வீடியோக்களும் வெளியாகி பொதுமக்களை பீதிக்கு உள்ளாக்கி வருகிறது. அதில் ஒன்று சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வந்த வீடியோ. இது ரஷ்யாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்ற குறிப்புடன் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், `‘மனித நடமாட்டம் இல்லாத நடுரோட்டில் ஒரு சிங்கம் ஹாயாக உலாவருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க ரஷ்ய அதிபர் புடின் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதையும் மீறி வெளியே வரும் பொதுமக்களை கட்டுப்படுத்த சிங்கங்களை தெருக்களில் நடமாட விட்டுள்ளது ரஷ்ய அரசு. இவ்வாறு ஒன்றல்ல இரண்டல்ல. 800க்கும் மேற்பட்ட சிங்கங்கள். கூடவே சில புலிகளும். இந்த அதிரடி நடவடிக்கையால் தற்போது மக்கள் நடமாட்டம் குறைந்துவிட்டது. இனி கொரோனா பாதிப்பு குறைந்துவிடும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பொய்யான செய்தி என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ 2016ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் சினிமா படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்டது. அதை ரஷ்யாவின் கொரோனாவுடன் இணைத்து திரித்து வெளியிட்டுள்ளனர்.


Tags : road ,Lions on the Road , India, Tamil Nadu, corona virus, 144 ban, corona, lions
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி