×

சேவை ரத்தானதை தொடர்ந்து சலுகை ரயில் நிலைய ஓய்வறைகளில் பயணிகள் தங்கும் காலத்தை நீட்டித்து உத்தரவு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில் நிலைய ஓய்வறைகளில் பயணிகள் தங்கும் கால அளவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடெங்கும் நேற்று முன்தினம் முதல் வரும் 31ம் தேதி வரை பயணிகள் ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளில் ரயில் பயணிகள் 3 மணி நேரம் முதல் 2 நாட்கள் வரை தங்குவதற்கு ரயில்வே அனுமதி வழங்கியிருந்தது. தற்போது ரயில்கள் ரத்து காரணமாக பயணிகள் வேறு இடங்களில் தங்க முடியாத சூழ்நிலை நிலவுவதால் ஓய்வறைகளில் தங்கியுள்ள பயணிகள் தங்கும் கால அளவை நீட்டித்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:  வரும் நாட்களில் பயணம் செய்வதற்காக ரயில் நிலைய ஓய்வறைகளில் தங்கியுள்ள பயணிகள் தற்போது ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தங்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது ஓய்வறைகளில் தங்குவதற்கான விதியை ரத்து செய்து பயணிகள் தேவையான காலத்துக்கு தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த உத்தரவு ரயில் போக்குவரத்து சீரடையும் வரை அமலில் இருக்கும்.
இது தொடர்பாக பயணிகளுக்கு ரயில் நிலைய அதிகாரிகள் உடனடியாக தெரிவித்து அவர்கள் பயன் அடைய செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது ரயில் நிலைய ஓய்வறைகளில் அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே ஒருவர் தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : passenger ,railway resorts ,service termination , India, Tamil Nadu, corona virus, 144 ban order, corona
× RELATED திருவொற்றியூரில் ரூ.60 லட்சம்...