×

நடைபாதைவாசிகள், வெளியூர் செல்ல முடியாத 3,800 பேர் காப்பகத்தில் தங்கவைப்பு: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: நடைபாதைவாசிகள், வெளியூர் செல்ல முடியாமல் தவித்த  3,800 பேர் காப்பகம் மற்றும்  சமூக நலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் தமிழகம் முடங்கியுள்ளது. நேற்று மாநகர பேருந்து குறைந்த அளவே இயக்கப்பட்டது. ரயில்கள் இயக்கப்படாத காரணத்தால் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் தவிர்த்தனர். இவர்கள் அனைவரையும் மீட்டு சமூக நலக் கூடத்தில் தங்க வைக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன்படி திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர், திரு.வி.க.நகர் கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள சமூக நலக் கூடங்களில் 1,727 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்படுகிறது.

இதேப்போல், நடைபாதையில் வசிக்கும் 2,064 பேர் மாநகராட்சியில் உள்ள 51 காப்பகங்களில்  தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. சாலையோரம் வசிப்பவர்கள் மற்றும் வெளியூர் ெசல்ல முடியாமல் தவிர்ப்பவர்கள் சென்னை மாநகராட்சி சமூக நலக் கூடம் மற்றும் காப்பங்களில் தங்கிக் கொள்ளலாம் என்று ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.


Tags : Corridors, Outdoors, Archive, Corona, Corporation Commissioner
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை