வில்லிவாக்கம் வாலிபருக்கு கொரோனா பாதிப்பில்லை: மருத்துவர்கள் உறுதி

அண்ணாநகர்: வில்லிவாக்கத்தில் தங்கியிருந்த காரைக்குடி வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சென்னை அரசு மருத்துவமனை உறுதி செய்துள்ளது.  சென்னை வில்லிவாக்கம், தெற்கு ஜெகன்நாதன் நகர் 8வது குறுக்கு தெருவில் காரைக்குடியை சேர்ந்த 20 வயது வாலிபர் தங்கியிருந்து, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு வில்லிவாக்கம் திரும்பிய இவர், கடுமையான காய்ச்சல், தலைவலி, சளியால் அவதிப்பட்டதால் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாமோ என்ற அச்சத்தில் நேற்று முன்தினம் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்த அமைந்தகரை 8வது மண்டல மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து, மாநகராட்சி ஊழியர்கள் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர். இதனிடையே வாலிபருக்கு நடைபெற்ற கொரோனா பரிசோதனையில், சாதாரண காய்ச்சலால் வாலிபர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் அவருக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கி வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

Related Stories:

>