×

31ம் தேதி வரை மீண்டும் புதுச்சேரியில் ஊரடங்கு

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி புதுச்சேரி மக்கள் 100 சதவீதம் அவர்களாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை மிகச் சிறப்பான முறையில் கடைபிடித்தனர். தொடர்ந்து இரவு 9மணியில் இருந்து 144 தடை உத்தரவையும் அமல்படுத்தினோம்.  கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கு வேறு மருந்து கிடையாது.
இருப்பினும் மக்ககள் அலட்சியமாக உள்ளனர். 31ம் தேதி வரை வீடுகளிலேயே இருப்பதுதான் அனைவருக்கும் நல்லது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் 300 ஓட்டல்களில் தங்கியுள்ளனர். அவர்களில்  90 சதவீதம் திரும்பி விட்டனர்.

இப்படி வந்தவர்களில் யாருக்கு கொரோனா இருக்கிறது இல்லை, என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும் காவல்துறை, வருவாய் துறையினர், ஓட்டல்களில் தங்கியிருந்த பெயர்களை எடுத்து, 515 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட கூடாது, வாங்கி சென்றுவிட வேண்டும். எங்கும் 5 பேருக்கு மேல் கூட கூடாது.  வெளியில் சுற்றுபவர்களிடம் காவல்துறை காரணம் கேட்கும். சரியான காரணம் கூறாதவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும். 31ம் தேதி வரை திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்ய வேண்டும். துக்க நிகழ்ச்சிகளை 3 மணிநேரத்திற்குள் முடித்து கொள்ள வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சில்லரை, மொத்த மது விற்பனை கடைகளும் மூடப்படும். இந்த ஊரடங்கு உத்தரவு புதுச்சேரியில் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றார்.

Tags : Puducherry , Puducherry, Curfew, Corona
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்