ஆன்மிக சுற்றுலா சென்ற மதுரை முதியவர்கள் அமிர்தசரசில் தவிப்பு

மதுரை:  மதுரையிலிருந்து கடந்த 9ம் தேதி மதுரை சோலைஅழகுபுரம் பகுதியைச் சேர்ந்த 26 பெண்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட முதியவர்கள், சந்திரமோகன் என்பவர் தலைமையில் வடமாநிலங்களில் உள்ள ஹரித்துவார், காசி புத்தகயா உள்ளிட்ட இடங்களுக்கு ரயிலில் ஆன்மிக சுற்றுலா சென்றனர். இவர்கள், பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு, அமிர்தசரஸ் பகுதிக்கு வந்தனர். கொரோனா வைரஸ் அச்சம் எதிரொலியாக, நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 21ம் தேதி முதல் 3 நாட்களாக  குடிநீர், உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளின்றி தவித்து வருகின்றனர். தங்களை பாதுகாத்து, மதுரைக்கு திரும்ப அனுப்பும்படி இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Related Stories:

>