×

நாசிக்கில் கரன்சி அச்சடிப்பது நிறுத்தம்

நாசிக்: நாசிக்கில் உள்ள இந்தியா செக்யூரிட்டி பிரஸ் (ஐ.எஸ்.பி.) மற்றும் கரன்சி நோட்டு பிரஸ்(சி.என்.பி.) மார்ச் 31ம் தேதி வரை மூடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஐ.எஸ்.பி. பிரிவில் 1,900 ஊழியர்களும், சி.என்.பி. பிரிவில் உள்ள 2,100 ஊழியர்களும் இரண்டு ஷிப்ட்களாக பணியாற்றி வருகின்றனர். மார்ச் 31ம் தேதி வரை இவர்கள் பணிக்கு வர மாட்டார்கள் என்றும் தீயணைப்பு படையினர், செக்யூரிட்டி கார்டுகள் மற்றும் அத்தியாவசிய சேவை தொழிலாளர் மட்டுமே பணிக்கு வருவார்கள் என்றும் ஐ.எஸ்.பி. தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜெகதீஷ் கோட்சே நேற்று கூறினார். இதற்கு முன்பு 1979ல் ஸ்டிரைக் காரணமாக ஐஎஸ்பி, சிஎன்பி பிரிவுகள் ஒரு மாதம் மூடப்பட்டன.

Tags : Nashik ,Currency Printing Stops , Nacikk, Currency
× RELATED மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு…...