×

கொரோனா அச்சம் நிலவிவரும் நிலையில் அமெரிக்க அமைச்சர் திடீர் ஆப்கன் பயணம்

காபூல்:  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று அவசர பயணமாக, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் சென்றார்.  ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளது. இதன்படி ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க வீரர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்ப அழைத்துக் கொள்ளப்படுவார்கள். அதேபோல் சிறையில் இருக்கும் தலிபான்கள், அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம் என்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழியின் அடிப்படையில் சிறையில் இருந்து ஆப்கன் அரசினால் விடுவிக்கப்படுவார்கள்.தற்போது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பீதி ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று அவசர பயணமாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் சென்றார்.

ஆப்கனில் அரசியல் குழப்பங்கள் நீடித்து வருவதால் தலிபான்களுடனான அமைதி ஒப்பந்த கையெழுத்துக்கு பின்னர் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படாமல் ஸ்தம்பித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற அஷ்ரப் கனி அதிபராக பொறுப்பேற்ற அதே நேரத்தில் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி அப்துல்லா அப்துல்லாவும் அதிபராக தன்னை அறிவித்துக் கொண்டுள்ளார். இதன் காரணமாக தலிபான்கள் உள்பட ஆப்கானில் அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பேச்சுவார்த்தையானது அமைதி ஒப்பந்தத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கருதப்படுகின்றது.    

மணமகளின் தந்தை உள்பட 4 பேர் கைது
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று கேரளாவில் திருவனந்தபுரம் கலெக்டர் கோபால கிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், வட்டியூர்க்காவு பகுதியில் ஒரு வீட்டில் திருமணமும், மணமகள் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இந்த 2 நிகழ்ச்சிகளிலும் உறவினர்கள், நண்பர்கள் என்று 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று மணமகளின் தந்தை ராமகிருஷ்ணன், உறவினர்கள் ரதீஷ்ராஜ், சந்தோஷ்குமார், சோனிஜார்ஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதேபோல் நிகழ்ச்சியில் பங்கேற்ற 65க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : US ,Minister Suddenly Travels ,minister ,Afghanistan ,Corona , Corona, US Minister, Afghan
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வழக்கு...