×

சில்லி பாயின்ட்...

* துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமையகம் மூடப்பட்டு, ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
* 2012 ஒலிம்பிக் நீச்சல் ஆண்கள் 100 மீட்டர் பிரெஸ்ட்ஸ்ட்ரோக் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற கேமரான் வாண்டெர் பர்க் (31 வயது, தென் ஆப்ரிக்கா) தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை சந்தித்ததிலேயே மிக மோசமான வைரஸ் பாதிப்பு இது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ளார்.
* இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சுரேஷ் ரெய்னா - பிரியங்கா தம்பதியருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ரெய்னாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
* வீரர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா தெரிவித்துள்ளார்.
* ஐபிஎல் தொடர் மே முதல் வாரத்தில் தொடங்கும் வாய்ப்பு கிடைத்தால் கூட முழுமையாக நடத்தி முடிக்க முடியும் என பிசிசிஐ தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஜூன் மாதம் நடைபெறுவதாக இருந்த அஜர்பைஜான் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக பஹ்ரைன், வியட்நாம், சீனா, நெதர்லாந்து, ஸ்பெயின் பந்தயங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மொனாகோ மற்றும் ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
*  ஸ்பெயினில் நடந்து வந்த லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* பெங்கால் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கோவிட்-19 மருத்துவக் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக சிஏபி தெரிவித்துள்ளது.
* பிரேசில் நாட்டில் உள்ள கால்பந்து ஸ்டேடியங்கள் அனைத்தும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தற்காலிக சிறப்பு மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன.

Tags : International Cricket Council ,Dubai , International Cricket Council ,Dubai
× RELATED சில்லி பாயிண்ட்...