×

கொரோனா உறுதியான பெண்ணின் பெற்றோருக்கு பாதிப்பு இல்லை

கோவை: ஸ்பெயின் நாட்டிற்கு சென்று வந்த கோவையை சேர்ந்த 32 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.  இவர் கடந்த வாரம் ஸ்பெயினில் இருந்து விமானம் மூலமாக பெங்களூர் வந்தார்.
பின்னர், அங்கிருந்து கால் டாக்ஸி மூலம் பெங்களூர் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ரயில் மூலம் கோவை ரயில் நிலையம் வந்தார். ெதாடர்ந்து கால் டாக்ஸி மூலம் வீட்டிற்கு சென்றார். இந்த பெண் ஸ்பெயினில் தங்கியிருந்த ரூமில் இருந்த பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. கடந்த 20ம் தேதி தாமாகவே முன்வந்து கோவை அரசு மருத்துவமனையில் தனக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். மேலும், மருத்துவமனையின் கொரோனா வார்டில் ேசர்த்தனர். அந்த பெண் மருத்துவமனையில் தங்க முடியாது என கூறிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

மேலும், என் பெற்றோருக்கு மட்டும் கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என மருத்துவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். பின்னர், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.  இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போலீசார் அந்த பெண்ணை கோவை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சேர்த்தனர். அவரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அவர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.  இந்நிலையில், ஆய்வு முடிவுகள் நேற்று முன்தினம் வந்தது. இதில், அந்த பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு நேற்று 2வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமாக இருப்பதாக மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த பெண்ணின் பெற்றோர், கோவை ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்து வந்த கால் டாக்ஸி டிரைவர், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவருடன் இருந்தவர்கள் என 14 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோரின் ஆய்வு முடிவுகள் நேற்று வந்தது. இதில், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : parents ,corona firm , Corona, Spain, Coimbatore
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்