×

பாகிஸ்தானில் வைரஸ் பாதித்த ஊழியருடன் கொரோனா ‘செல்பி’ எடுத்த 6 அதிகாரிகள் சஸ்பெண்ட்

கராச்சி: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஆறு மாவட்ட நிர்வாக அதிகாரிகள், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சக ஊழியருடன் செல்பி எடுத்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானில் இருந்து திரும்பி வந்த ஒரு ஊழியருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அது தெரிந்தும், அவருடன் நெருங்கிய சந்திப்பை சிந்து மாகாணத்தை சேர்ந்த ஆறு வருவாய் அதிகாரிகள் ஏற்படுத்திக் கொண்டனர். மேலும், அவருடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர். இந்த படம் சமூக இணையதளத்தில் வைரலானது.

இந்நிலையில், மேற்கண்ட 6 அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்து கைபூரின் துணை ஆணையர் ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘சமீபத்தில் ஈரானில் இருந்து திரும்பி வந்த கொரோனா பாதித்த இர்ஷாத் அலி ராஜ்பர் என்பவருடன் 6 மாவட்ட அதிகாரிகள் செல்பி எடுத்துக் கொண்டனர். அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவில்லை. சமூக ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

தற்போது, ​​பாகிஸ்தானில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 799 ஆக அதிகரித்துள்ளது. இதில் சிந்துவிலிருந்து 352 பேர் உள்ளனர். இறப்பு எண்ணிக்கை தற்போது ஐந்து ஆக உள்ளது.

Tags : Pakistan ,Selby ,Corona , Pakistan, Corona, Selby, 6 officers, suspended
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்