×

கோஹ்லி ஒரு தரமான பேட்ஸ்மேன்: பாக். மாஜி கேப்டன் சான்று

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஜாவித் மியான்தத் தனது யூடியூப் சேனலில் விராட் கோஹ்லி குறித்து கூறியிருப்பதாவது: இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர் யார் என்று என்னிடம் கேட்டால் விராட் கோஹ்லி என்றுதான் கூறுவேன். புள்ளி விபரங்களும் இதையே கூறுவதால் மக்கள் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். கோஹ்லி தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக செயல்பட்டார்.

அதிலும் சீரற்ற ஆடுகளத்தில் சதம் அடித்தார். வேகப்பந்து வீச்சுக்கு எதிராக பயப்படுகிறார் அல்லது பந்து எகிறி வரும் ஆடுகளங்களில் விளையாட முடியாது அல்லது சுழற்பந்து வீச்சு எதிராக சிறப்பாக விளையாட முடியாது என எந்தவித குறைகளையும் கோஹ்லியை பார்த்து கூற முடியாது. அவர் பேட்டிங்கில் வெளுத்துக்கட்டக் கூடியவர். அவர் விளையாடும் ஷாட்களை பார்க்க நன்றாக இருக்கிறது. அவர் ஒரு தரமான வீரர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Kohli ,Magi Captain ,Pak , Kohli, quality batsman, Pak. Magi is the captain
× RELATED விராட் கோலி முன்னின்று அணியை...