×

தாய்லாந்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஈரோட்டில் 20 பேரை கண்காணிக்க முடிவு

பெருந்துறை: கொரோனா அறிகுறியுடன் ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவமனையில் தங்கியுள்ள தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் சத்தியமங்கலம், பவானி, கோபி பகுதியில் உள்ள மசூதிகளில் மதப்பிரசங்கம் நடத்திவிட்டு பின்னர் ஈரோடு, கொல்லம்பாளையம் வந்துள்ளனர். தற்போது இவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதால் அவர்கள் தங்கியிருந்த இடம் மற்றும் இவர்களோடு நெருக்கமாக இருந்தவர்கள், அவர்களை அழைத்துச் சென்றவர்கள், மொழி பெயர்ப்பாளராகவும் சமையலராகவும் உடனிருந்து பணியாற்றியவர் என 20க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதிதாக கொரோனா வார்டுகள் தயார் செய்யப்பட்டவுடன் அந்த 20க்கும் மேற்பட்டோர் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளனர். தாய்லாந்தை சேர்ந்த 6 பேர் ஐ.ஆர்.டி. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, ஒரே வார்டில் 6 பேரும் இருந்தனர். தற்போது இருவருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் மற்ற 4 பேரையும் மறு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அவர்கள் தங்கியிருந்த வார்டுகளில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோரின் பட்டியல் பெறப்பட்டு, அவர்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

மேலும், ஈரோட்டில் கொரோனா பாதித்த தாய்லாந்து நபர்கள் தொழுகை நடத்திய பள்ளிவாசல்  உள்பட அனைத்து பள்ளிவாசல்களையும் மூட ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஒருவர் ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் வசிக்கும் ஒருவர் தனக்கு காய்ச்சல் இருப்பதாக கூறி கடந்த 20ம் தேதி ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலையில் சந்தேகத்திற்கு இடமான சில மாற்றங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் பரிந்துரைப்படி உடனடியாக அவரை 108 சிறப்பு ஆம்புலன்சில் ஏற்றி, நேற்று நள்ளிரவு பெருந்துறை ஐ.ஆர்.டி. அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் அவரை அனுமதித்தனர்.



Tags : Thailand ,Corona ,native , A native of Thailand, Corona, Erode
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...