×

தமிழகத்தில் 144 தடை உத்தரவு எதிரொலி: சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு, பெருங்குளத்தூரில் கூட்டம் அலைமோதல்...பேருந்துகள் நாளை வரை இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர் புறப்பட்டதால் பெருங்குளத்தூரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வெளியூர்களுக்கு குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் அவற்றில் எற மக்கள் போட்டா போட்டி போட்டு ஏறி செல்கின்றார். வழக்கமாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சென்னையிலிருந்து ஏராளமான மக்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் செல்வார்கள். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் தங்கள் விருப்பம் போல டிக்கட் விலையை நிர்ணயம் செய்வார்கள்.

தற்போது கொரோனா தொற்றினால் உலகமே பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் தனிமை படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தமிழக அரசு ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன் படி நாளை மாலை 6 மணி முதல் இம்மாதம் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. 144 என்ற இந்த ஊரடங்கு உத்தரவினால் பலரும் இன்றே சொந்த ஊர்களுக்கு செல்ல முயற்சி செய்கின்றனர். சென்னை கோயம்பேட்டில் தற்போது மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏற்கனவே கடந்த சனிக்கிழமையும் மக்கள் அதிக அளவில் ஊர்களுக்கு பயணம் செய்தனர்.

மேலும் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர் புறப்பட்டதால் பெருங்குளத்தூரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வெளியூர்களுக்கு குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் அவற்றில் எற மக்கள் போட்டா போட்டி போட்டு ஏறி செல்கின்றனர். கட்டுக்கடங்காத பொதுமக்கள் கூட்டம் இருக்கிறது. இதனால் பேருந்துகளில் இடம் பிடிப்பது உள்ளிட்டவற்றில் பயணிகளிடையே மோதல், வாக்குவாதம் உள்ளிட்டவை ஏற்படுகிறது. பயணிகளை ஒழுங்குபடுத்தவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் கூடுதலாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

தமிழகத்தில் நாளை மாலை வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு போதிய பேருந்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். விழுப்புரம், திண்டிவனம், திருச்சி வரை சென்னை மாநகர பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளின் இயக்கம் குறைவாக இருப்பதால் சென்னை பேருந்துகள் கூடுதல் தொலைவு இயக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து நாளை மாலை வரை வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்; எனவே பொதுமக்கள் கவலையடைய வேண்டாம்.

Tags : Tamil Nadu ,Coimbatore ,Crowds ,Perungalathur , Tamil Nadu, 144 bans, Coimbatore, Perungalthur, buses
× RELATED சோசியல் மீடியாக்களில் தேர்தல் விதிமீறல் கண்காணிப்பு