×

கொரோனா சிகிச்சைக்கு மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பரிந்துரைத்தது மத்திய அரசு

டெல்லி :  கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பரிந்துரைத்தது மத்திய அரசு. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தோற்றுவித்துள்ள, கொரோனா வைரசுக்கான தேசிய சிறப்பு படையானது, மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைடிராக்சிகுளோரோகுயின் என்ற மருந்து பொருளை வைரஸ் பாதிப்பு சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளது.

பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ்சால் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் உயிர்களை பலி வாங்கிய இந்த கொடூர வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ குழுவினர் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹைட்ராக்சிகுளோரோகுயினை கொரோனாவுக்கு  தடுப்பு மருந்தாக கொடுக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின்

அதனைத் தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சிலும் அதே பரிந்துரையை செய்துள்ளது. கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தர பரிந்துரைத்தது மத்திய அரசு. இந்திய மருத்துவ கவுன்சில் அமைத்த தேசிய அவசர காலக் குழு,  தடுப்பு மருந்து குறித்து பரிந்துரை செய்துள்ளது. ஹைட்ராக்சிகுளோரோகுயினை கொரோனாவுக்கு மருந்தாக அமெரிக்கா அறிவித்திருந்தது. மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு தரலாம் என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

Tags : Central Government ,government , Haitrakcikuloroku's, malaria
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.....