×

நோய் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது: முதல்வர் பழனிசாமி

சென்னை: பொதுப்போக்குவரத்து, தனியார் வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் ஓடாது என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் உணவகங்கள் திறக்க அனுமதி வழங்கப்படும்; பார்சல் மூலம் மட்டுமே உணவு வழங்க உணவகங்களுக்கு அனுமதி. தமிழகத்தில் அம்மா உணவகங்கள் செயல்படும். மேலும் மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி எனவும் அறிவித்துள்ளார். தனியார் நிறுவனங்கள், பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யக் கூடாது. நோய் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.


Tags : Palanisamy ,government , Immunization, Relief, Government, Chief Minister Palanisamy
× RELATED மருத்துவ நிபுணர் குழுவுடன்...