×

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து சுமார் 92,000க்கும் அதிகமானவர்கள் குணம்: அமெரிக்க ஆய்வில் தகவல்

அமெரிக்கா: உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து சுமார் 92,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்து உள்ளதாக அமெரிக்காவில் இயங்கும் மருத்துவ ஆராய்ச்சி பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. கோவிட் -19 காய்ச்சல் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இவ்வைரஸ் பாதிப்புக்கு சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக பாதிப்பை அடைந்துள்ளன.

சீனாவின் வுஹான் நகரில் உருவான கோவிட் -19 கொரோனா வைரஸால் இதுவரை உலகளவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதில் சீனாவில் சுமார் 3,270 பேரும், இத்தாலியில் 5,476 பேரும் கோவிட் 19 காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் உரிய முறையில் தனிப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் உலகம் முழுவதும் சுமார் 92,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்து உள்ளதாக அமெரிக்காவில் இயங்கும் மருத்து ஆராய்ச்சி பல்கலைகழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் வெளியிட்ட தகவலில் குறிப்பிட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள அறிவியலாளர்களும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் கோவிட் 19 காய்ச்சலுக்கு (கொரோனா வைரஸ்) மருந்து கண்டுபிடிக்கப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் சமூகரீதியிலான தனிமைப்படுத்திக்கொள்ளுதல் என்பது பொதுமக்களின் கட்டுப்பாடு அவசியமானது. அப்போதுதான் நோய்ப் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்றும் கூடுமான வரை வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : US , Worldwide, coronavirus virus, about 92,000, attributes, in a US study, reported
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...