×

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முதல் கட்ட பணிகள் தொடங்கியது: சம்பத் ராய் பேட்டி

டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முதல் கட்ட பணிகள் தொடங்கியது. ராமர் சிலை வைக்கப்படும் புதிய இடத்தைதேர்வு செய்து அங்கு பூஜை செய்யபட்டது. கட்டுமானப் பணி  தொடங்குவதற்கு முன்பு சிலையை கூடாரத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றும் பணி தொடங்கும். விஸ்வ இந்து பரிஷத் துணைத் தலைவரும், ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளருமான சம்பத் ராய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமர் சிலை புதியவைப்பதற்கான  இடத்தின் பிரதிஷ்டை இன்று  காலை 7 மணிக்கு தொடங்கியது. அறக்கட்டளை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ. இதில் கலந்து கொணட்னர். சிலை மார்ச் 25 ஆம் தேதி புதிய இடத்திற்கு மாற்றப்படும். முறையான அடிக்கல் நாட்டப்பட்ட பின்னர், கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என கூறினார்.

Tags : phase ,Sampath Rai ,Ram Temple ,Ayodhya ,Rama Temple , first phase,construction,Rama Temple,Ayodhya , Sampath Rai
× RELATED கீழடி 6ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமான சுவர்கள்கண்டுபிடிப்பு