×

+1 , +2 தேர்வை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை; கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும் பாராட்டு

சென்னை : 11 ,12ம் வகுப்பு பொதுத்தேர்வை 30 நிமிடம் தாமதமாக தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் சென்னை, காஞ்சி,ஈரோடு மாவட்ட மாணவர்கள் தேர்வுக்கு செல்ல சிறப்பு போக்குவரத்து ஏற்பாடு செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போதுமான அளவில் முகக் கவசங்கள் , சானிடைசர் வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு

சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் சங்க நூலகர் ஜி.ராஜேஷ் தாக்கல் செய்த மனுவில், ‘‘கொரோனா வைரஸ் பரவலால் சென்னையில், முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் கிடைக்காத நிலை உள்ளது. மருந்து கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.’’ என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதைக்கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாகவும் அரசு தரப்பு விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

 +1 , +2 தேர்வை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க அறிவுரை

இந்நிலையில் மேற்கூறிய வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது , பொது தேர்வு நடைமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்று கடந்த வாரம் கேட்ட கேள்விக்கான விளக்கம் அரசின் சார்பில் அறிக்கையாக  அளிக்கப்பட்டது.தமிழக அரசு வழக்கறிஞ்ர் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும்,  11ம் வகுப்பு தேர்வு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இன்றும்  கூட தேர்வு நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை வரை தேர்வு நடைபெறுவதாக தெரிவித்தார்.

அப்போது +1 , +2 தேர்வை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி, 10 மணிக்கு தொடங்கும் தேர்வை 10.30 மணிக்கு  தொடங்கி 1 30 வரை நடத்த வேண்டும் என்றும், தேர்வு எழுதும்  மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து சேவையை ஏற்படுத்தித் தர வேண்டும். இதை உடனடியாக பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அரசுத் தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.அதே சமயம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : government ,Court ,Tamil Nadu ,violators , Strict adherence to curfews .. Take legal action against violators:...
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...