×

அரசின் உத்தரவுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்; கொரோனா அறிகுறி இருப்பதை தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை; பேரவையில் முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை: சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைய நிலையில் 192 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,616 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,36,838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தை பொருத்தவரை கொரோனா வைரசால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நேற்று காலை முதல் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தற்போது, பொதுமக்களின் சேவைக்கு 50% மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து வெளி மாவட்டத்திற்கு குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெளிமாநிலத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, 2 நாள் விடுமுறைக்குப்பின் தமிழக சட்டப்பேரவை மீண்டும் இன்று கூடியது.  முன்னதாக, நேற்றைய தினம் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் பின்பற்றியதற்கு சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, சில எச்சரிக்கைகளை மக்களுக்கு விடுத்தார். பேரவையில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கொரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொரோனா தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று எச்சரித்தார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. மருத்துவமனைகளில் 92,406 படுக்கை வசதிகள் உள்ளன, தேவைப்பட்டால் அதிகரிக்கப்படும். முகக்கவசங்கள் உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு. கொரோனாவால் ஒரு உயிரை கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை என்றும் தெரிவித்தார்.

கொரோனா தொடர்பான அரசின் உத்தரவுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் பேரவையில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து  வருகிறது. தமிழகத்தில் பால், காற்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்க தடையில்லை என்றும் கூறியுள்ளார்.  முன்னதாக, பேரவை தொடங்கியது. கூட்டத்தொடரை ஒத்திவைக்க கோரி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூட்டத்தொடரை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே, முதல்வர் உரை முடிந்தப்பின் சட்டப்பேரவை நாளை முதல் நிறைவு செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். 


Tags : speech ,panel ,Palanisamy , Government orders must be followed; If coronal symptoms are not reported, it will be a serious move ...
× RELATED ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க...