×

ராஜஸ்தான் அரசு உத்தரவு பெட்ரோல், டீசலுக்கு வாட் 4% அதிகரிப்பு: மக்கள், விற்பனையாளர்கள் அதிர்ச்சி

ஜெய்ப்பூர்:  உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடைந்து பேரல் ஒன்றுக்கு 30 அமெரிக்க டாலராக விற்பனையாகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் ₹5 வரை குறையும் வாய்ப்பு இருந்தது. ஆனாலும், இதன் பயனை நுகர்வோருக்கு அளிக்காமல் மத்திய அரசு கடந்த 13ம் தேதி எரிபொருள் மீதான கலால் வரியை லிட்டருக்கு ₹3 உயர்த்தி அறிவித்தது. இந்நிலையில், ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை திடீரென 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக அரசு  வெளியிட்ட அறிக்கையில், ‘பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி முறையே 30-ல் இருந்து 34 ஆகவும், 22ல் இருந்து 26 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜஸ்தான் பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் சுனீத் கூறுகையில், ``விலை உயர்வு டீலர்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும். ராஜஸ்தானுடன் ஒப்பிடுகையில் அண்டை மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹5 முதல்₹10 வரை குறைந்து உள்ளது. இதனால் பிற மாநில எல்லைகளில் உள்ள டீலர்கள் தங்களது விற்பனை நிலையங்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வருவாய் இழப்பை வரி மூலம் மக்கள் மீது திணிப்பதால் விற்பனை சரிவடைகிறது,’’ என்று வேதனை தெரிவித்தார்.

Tags : government ,Rajasthan , Rajasthan Government,orders ,4% increase , VAT , petrol and diesel
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...