×

நாடு முழுவதும் 31ம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து: மெட்ரோ ரயில்களும் இயங்காது

புதுடெல்லி: நாடு முழுவதும் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக, வரும் 31ம் தேதி வரையில் பயணிகள் ரயில் இயங்காது என்று ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோல், மெட்ரோ ரயில்களும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 324 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மக்கள் சாதாரண விடுமுறை நாட்களைப் போல், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும், உறவினர் வீடுகளுக்கு செல்வதுமாக உள்ளனர். இதனால், ரயில்களில் கூட்டம் அலை மோதுகிறது.

இதனால் பொதுமக்கள் இங்கும், அங்குமாக செல்வதை தடுப்பதற்காக மத்திய அரசு அறிவுறுத்தலின்படி ரயில்வே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில்களும் வரும் 31ம் தேதி இரவு வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள், தங்கள் பயணக் கட்டணத்தை திரும்ப பெற, ரயில்வே நேற்று முன்தினம் சலுகைகளை அறிவித்திருந்தது. அது இந்த மார்ச் 31ம் வரையிலான பயணங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சரக்கு ரயில்கள் மட்டும் வழக்கம்போல் இயங்கும். மெட்ரோ ரயில்களும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கொல்கத்தாவில் மட்டும் சில புறநகர் ரயில்களும், மெட்ரோ ரயில் சேவை நேற்று நள்ளிரவு வரை மட்டும் இயக்கப்பட்டது. பின்னர், அதுவும் நள்ளிரவு 12 மணி முதல் நிறுத்தப்பட்டது.



Tags : Passenger,train service, canceled till ,31st ,month
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...