×

வில்லிவாக்கத்தில் பரபரப்பு வாலிபருக்கு கொரோனா அறிகுறி: ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சென்னை: சென்னை வில்லிவாக்கம் சவுத் ஜகன்நாதன் நகர், 8வது குறுக்கு தெருவை சேர்ந்த வாலிபர், சொந்த ஊரான காரைக்குடி சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வில்லிவாக்கம் வந்தார். வீட்டிற்கு வந்த அவர், கடுமையான காய்ச்சல், தலைவலி, சளி, இருமலால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ரிஜிஷ்பாபு உடனே அமைந்தகரை சென்னை மாநகராட்சி 8வது மண்டல அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடுமையாக காய்ச்சலில் அவதிப்பட்டு வந்த வாலிபரை 108 ஆம்புலன்சை வரவழைத்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்பு அந்த பகுதி முழுவதும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள், கிருமிநாசினி தெளித்து அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அந்த வாலிபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்குமா என அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்பட்டுள்ளது. மேலும் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அந்த வாலிபரை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை தனி வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Rajiv Gandhi Hospital ,Coroner , Coroner's Syndrome,Intensive Care ,Rajiv Gandhi Hospital
× RELATED நோய்க்கு ஏற்ற உணவு முறை 2400...