×

பாடகியுடன் பழகிய பல்லாயிரம் பேர் பீதி: ஆயிரம் பேரை களமிறக்கியது உபி அரசு

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தாக்கி இருப்பது, கடந்த வெள்ளிக்கிழமை உறுதியானது. கடந்த 11ம் தேதிதான் லண்டனில் இருந்து அவர் லக்னோ திரும்பி வந்துள்ளார். அதன் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை லக்னோவில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளார். அதில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களும் இருந்துள்ளனர். இதனால், கனிகாவுடன் தொடர்பில் இருந்த பல ஆயிரம் பேரை கண்டுபிடிக்க, ஆயிரம் ஊழியர்கள் கொண்ட 100 குழுக்களை உத்தர பிரதேச அரசு களமிறக்கி இருக்கிறது. கனிகாவின் வீட்டுக்கு அருகே வசிக்கும் 22 ஆயிரம் பேருக்கு இக்குழு பரிசோதனை நடத்தி விட்டது. மேலும், அவரது நிகழ்ச்சிகளின் வீடியோக்கள், சிசிடிவி ேகமரா பதிவை கொண்டு அதில் இருப்பவர்களை கண்டுபிடித்து பரிசோதிக்கும் அடுத்தக்கட்ட முயற்சியில் இக்குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

Tags : Tens of thousands ,govt ,Singer Uppi ,Corona , Corona
× RELATED வீட்டிலேயே முடங்கி இருந்ததால்...