×

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைப்பா?: அலுவல் ஆய்வு கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைப்பது குறித்து இன்று அலுவல் ஆய்வு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.  ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு வருகிற 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் ரயில்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் பணியாற்றும் 90 சதவீத ஊழியர்கள் ரயில் மூலமாக பணிக்கு வருகின்றனர்.

ரயில்கள் இயக்கப்படாததால் அவர்கள் பணிக்க வரமுடியாத நிலை வேறு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து இது குறித்து விவாதிக்க சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று 12 மணியளவில் கூட உள்ளது. இதில் சட்டப்பேரவையை ஒத்திவைப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தலைமை செயலகம் வட்டாரங்கள் கூறுகின்றன.

Tags : Meeting ,Postponement session , Postponement session,postpone,Coronavirus infection
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...