×

சென்னை, காஞ்சி, ஈரோடு முடக்கம் காரணமாக மக்கள் பாதிக்காதவாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மக்களின் அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படாதவாறு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு நடவடிக்கையை அடுத்து, சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு  ஆகிய மூன்று மாவட்டங்களை 31ம் தேதி வரை முடக்குவதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், முதலமைச்சர் உடனடியாக ஆலோசனை நடத்தி, மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படாதவாறு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடைபாதைவாசிகள், இரவலர் ஆகியோருக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சட்டமன்ற கூட்டத்தொடரை நாளை முதல் ஒத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Kanchi , Chennai, Kanchi, Erode Freeze,people ordered
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...