×

கொரோனா வைரஸ் எதிரொலி முகக்கவசம் அணிந்தபடி தாலி கட்டிய மணமகன்

சென்னை: கொரோனா பீதியால் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த ஒரு திருமணத்தில் மணமகன் முகக்கவசம் அணிந்தபடி மணமகளுக்கு தாலி கட்டினார்.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் சுய ஊரடங்கு கடைபிடித்தனர். இதனால், பொது இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில், நெய்வேலியை சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சியர் மூர்த்தி என்பவரின் மகன் கவுதம் கார்த்திக் என்பவருக்கும், காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளர் திருவேங்கடத்தின் மகள் தமிழ்ச்செல்வி என்பவருக்கும் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் திருமணம் செய்ய கடந்த 4 மாதங்களுக்கு முன்பே நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

அதற்காக கட்டணமும் செலுத்தப்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கை முன்னிட்டு கோயில் மூடப்பட்டிருந்தது. இதனால் காஞ்சிபுரம் நாராயண பாளையம் தெருவில் உள்ள மணமகள் இல்லத்தில் நேற்று திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் கையை கிருமிநாசினி மூலம் கழுவிய பிறகே பின்னரே வீட்டில் அனுமதிக்கப்பட்டனர்.

மணமகள், மணமகன் மற்றும் திருமணத்துக்கு வந்தவர்கள் அனைவரும் முகக்கசவம் அணிந்திருந்தனர். பின்னர், முகக்கவசம் அணிந்த நிலையில் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார். அப்போது உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்தினர். மிகக்குறைவான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதால் திருமணம் எளிமையாக நடந்தது.

Tags : groom ,talisman , Corona virus, mask, thali, groom
× RELATED பாட்னா அருகே நடைபெற்ற திருமணத்தால்...