×

தமிழகத்தில் இன்று முதல் நகர பேருந்துகள் இயங்கும்: போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுபடுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களுக்கும், இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவு காரணமாக பஸ் இயக்கப்படவில்லை. இன்று காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் மாநிலங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், அனைத்து நகரப்பேருந்துகள் இயக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 5 மணி முதல் அனைத்து மாவட்டங்களிலும் (சென்னை உட்பட) நகர பேருந்துகள் இயங்கும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

Tags : Transport
× RELATED சென்னை தலைமைச் செயலகத்தில்...