×

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை: மாயமான 17 வீரர்களின் சடலங்கள் கண்டெடுப்பு

ஸ்ரீநகர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட வனப்பகுதியில் நக்சலைட்டுகளுடன் நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் பலர் உயிரிழந்த நிலையில் 17 பாதுகாப்புப்படை வீரர்களை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராய்ப்பூர், சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சிறப்பு அதிரடி படைகளை சேர்ந்த போலீசார் அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தேடுதல் வேட்டைக்குப்பின் அதிகாரிகள் திரும்பிய நிலையில் கொராஜ்குடா பகுதியில் எதிர்பாராத விதமாக ஏராளமான நக்சலைட்டுகள் ஒன்றுகூடி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு ராய்ப்பூர் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இருவரது நிலை மோசமாக உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் 250-க்கும் அதிகமான நக்சலைட்டுகள் மறைந்து இருந்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் கிடைத்ததன் மூலம் மேலும் 500 பாதுகாப்புப்படை வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர்.

வீரர்களுக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற கடுமையான துப்பாக்கி சண்டையில் ஏராளமான நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக சண்டை நீடித்துள்ளது. இதற்கிடையில் சிறப்பு அதிரடி படையை சேர்ந்த 5 பேர் மற்றும் மாவட்ட ரிசர்வ் படையை சேர்ந்த 12 பேர் என 17 பேரை காணவில்லை என தகவல் வெளியானது. இதனையடுத்து அவர்களை தேடும் பணியை இன்று மேற்கொண்டுள்ளனர். வனப்பகுதியில் 17 வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் DRF எனும் மாவட்ட ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்தவர்கள். இத்தனை ஆண்டுகால வரலாற்றில் நக்சல் தடுப்பு வேட்டையில் மாவட்ட ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உயிரிழந்திருப்பது இதுவே முதற்முறையாகும்.


Tags : fighting ,Naxalites ,Chhattisgarh ,soldiers ,gunmen , Chhattisgarh, Naxalites, gunmen, soldiers, corpses
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!!