×

முடங்குகிறது டெல்லி: நாளை முதல் மார்ச் 31ம் தேதி நள்ளிரவு வரை மாநிலம் முழுவதையும் மூட முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை டெல்லி முழுவதும் அனைத்து செயல்பாடுகளையும் முடக்கப்படுகிறது என மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

அதனை ஏற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இது பல்வேறு மாநிலங்களில் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் நாளை காலை 6 மணி முதல் அனைத்து செயல்பாடுகளும் முடக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்; சமூகப்பரிமாற்றத்தின் மூலம், 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக விளக்கம் அளித்தார். நாளை காலை 6 மணி முதல் வரும் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

உள்நாட்டு விமானங்கள் டெல்லி வந்து செல்ல மார்ச் 31-ம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கான போக்குவரத்தை தவிர தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் , இ-ரிக்ஷாக்கள் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது. அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் அவர்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என கூறினார்.


Tags : Kejriwal ,closure ,state ,Delhi , Delhi, Chief Minister Kejriwal
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...