×

பாடம் கற்பிக்கும் கொரோனா: நாடு முழுவதும் 75 மாவட்டங்களின் எல்லைகளுக்கு சீல் வைப்பு

டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 75 மாவட்டங்களின் எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி நாட்டு மக்களை பீதியடையவைத்துள்ளது. பிரதமர் மோடி வேண்டுகோள்படி கொரோனாவை கட்டுப்படுத்த இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் சுய ஊரடங்கு கடைபிடித்து வருகின்றனர். இதனிடையே பல்வேறு மாநிலங்களில் சுய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சுய ஊரடங்கு அடைப்பிடிக்கப்பட்டு வருவதால் நாடு முழுவதும் 75 மாவட்டங்களின் எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசம், மராட்டியம், மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. நாட்டின் முக்கிய நகரங்களின் எல்லைகள் தனித்தீவு போல் சீல் வைக்கப்பட்டுள்ளன. வாரணாசி, ஆக்ரா, லக்னோ நகரங்களுக்குள் யாரும் செல்லவோ, வெளியேறவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குஜராத், அகமதாபாத், சூரத், பரோடா, ராஜ்கோர்ட், காந்திநகர் ஆகிய நகரங்களின் எல்லைகள் மூடல். சீல் வைக்கப்பட்ட நகரங்களில் இருந்து வெளியேற வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. மேற்கு வங்கத்தில் கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சீல் வைக்கப்பட்டுள்ளது.


Tags : Corona ,Districts ,Borders , Corona, country, border, sealed deposit
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...