×

கொரோனா வைரஸ் எதிரொலி: மக்கள் ஊரடங்கு உத்தரவை வரும் 31-ம் தேதி வரை நீடித்தது பஞ்சாப் அரசு....வேலையில்லா தொழிலாளர்களுக்கு உதவி ரூ.3,000 அறிவிப்பு

பஞ்சாப்: கொரோனா வைரஸ் நோய் தொற்று சங்கிலியை தடுக்க பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று பஞ்சாப் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. சீனாவில் உருவாகி உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸுக்கு உலக நாடுகள் அஞ்சி வருகின்றன. உலக அளவில் இதுவரை கொரோனா வைரஸுக்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள். 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் அமரிந்தர் சிங் முதல்வராக இருக்கிறார். அந்த மாநிலத்தில் கொரோனா வைரஸுக்கு இதுவரை 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கனோர் கண்காணி்ப்பில் வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மக்கள் ஊரடங்கு கொரோனா வைரஸ் பரவதைத் தடுக்க பெருமளவு உதவும் என்று பஞ்சாப் அரசு பெருமளவு நம்புகிறது. இதையடுத்து மக்கள் ஊரடங்கை வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையிழந்துவிடுவார்கள். அவர்களுக்கு உதவும் வகையில், உடனடியாக அவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். அவர்களின் வங்கிக்கணக்கில் நாளை டெபாசிட் செய்யப்படும். இதற்காக ரூ.96 கோடி உடனடியாக ஒதுக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Corona ,government ,Punjab , Corona virus echo, People curfew, Government of Punjab
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து