×

கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கு சோதனை; அவளிடம் இருந்து கொஞ்சம் தள்ளி நிற்க கூடாதா?... பேஸ்புக் கணக்கை ‘ஹேக்’ செய்த மனைவி

மும்பை: இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்,  கடந்த ஆண்டு குடலிறக்கத்தால் ஓரங்கட்டப்பட்டு பின்னர்  தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணிக்கு திரும்பினார். இருப்பினும்,  தர்மசாலாவில் நடத்த திட்டமிட்ட முதல் ஒருநாள் போட்டி ரத்தானதால், அவரால்  தொடர்ந்து விளையாட முடியவில்லை. இந்நிலையில், புவனேஷ்குமார் சமீபத்தில் நடந்த ‘ஸ்பைசி பிட்ச்’ எபிசோடில், தனது மனைவி நூபூர் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்தார். அதில், ‘அவள் (நுபூர்) என்னிடம் பேஸ்புக் கடவுச்சொல்லைக் (பாஸ்வேர்ட்) கேட்டாள்; ஆனால் நான் தர மறுத்துவிட்டேன். அடுத்த நாள் இது உங்கள் புதிய கடவுச்சொல் என்று அவள் என்னிடம் கூறுகிறாள். அவள் எனது பேஸ்புக் கணக்கை ‘ஹேக்’ செய்தாள்; அதன்பிறகு நான் பேஸ்புக்கைப் பயன்படுத்தவில்லை” என்றார்.

இதுகுறித்து நுபூர் கூறுகையில், ‘அவர் ஒரு பெண் ரசிகருடன் ஒரு படத்தைக் கிளிக் செய்யும் போது, ​​அவருடன் இவ்வளவு நெருக்கமாக நிற்க வேண்டிய அவசியம் என்ன? என்று நான் அவரிடம் கேட்டேன். சிறிது தூரம் இடைவெளிவிட்டு நிற்கும்படி அவளிடம் கேட்க முடியவில்லையா? என்றேன். அதற்கு அவர், அவர்கள் நின்றால் நான் என்ன செய்ய முடியும்? என்று என்னிடம் திருப்பி கேட்டார்’ என்றார். மேலும் அவர் கூறுகையில், 2012ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியின் போது, புவனேஷ்வரின் பந்து வீச்சால் ஈர்க்கப்பட்டேன். அப்போது நான் ஹாஸ்டலில் இருந்தேன். என் நண்பர்களுக்கு என்னைப் பற்றியும் புவியைப் பற்றியும் எதுவும் தெரியாது. அவர்களும் அவரது பந்துவீச்சில் மிகவும் ஈர்க்கப்பட்டனர். அந்த 15ம் எண்ணை அழைக்கவும் என்று கிண்டலடித்தனர். அதன்பின், புவனேஷ்வருடன் நட்பு ஏற்பட்டது’ என்றார்.

Tags : Bhubaneswar Kumar , Bhuvneshwar Kumar, hack Facebook account, wife
× RELATED சிறப்பு ரயிலில் செல்லும்...