×

உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்திய ரஷ்யா

மாஸ்கோ : உலகமே கொரோனா வைரஸ் கிருமி காரணமாக முடங்கிக்கிடக்கும் நிலையில் ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா அதிபர் புடின் எடுத்த உறுதியான நடவடிக்கை காரணமாக நோய் தொற்று வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவ ஆரபிக்கும் போதே அதிபர் புடின் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க உத்தரவிட்டார். மேலும் மக்கள் ஒன்று கூடினால் தண்டனை என அதிரடியாக அறிவித்து கொரோனா தொற்று பரவாமல் இருக்க அறிவுரைகள் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடி வரும் நிலையில் 146 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ரஷ்யாவில் 256 பேருக்கு மட்டுமே கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா பரவ தொடங்கிய போதே ரஷ்யா தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவ தொடங்கிய சில நாட்களிலே அதாவது ஜனவரி 30ம் தேதி அன்றே 2600 மைல் சீன எல்லை மூடப்பட்டது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவதற்கான முகாம்களை ஏற்படுத்தியது.

Tags : Russia ,Corona ,world , Corona
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...