×

கொரோனாவுக்கு எதிரான மக்கள் சுய ஊரடங்கு: சங்கிலியை உடைத்து, சுய தனிமை மூலம் நம் நாட்டைப் பாதுகாப்போம்: மத்தியமைச்சர் அமித்ஷா டுவிட்

டெல்லி: உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் நாடு முழுவதும் 335க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானவர்களுக்கு சந்தேகத்தின்பேரில் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். உலகளவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,025 உயர்ந்துள்ளது. உலகளவில்  கொரோனவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,06,892 ஆக உயர்ந்துள்ளது.

 இதற்கிடையே, கொரோனா வைரஸை தடுக்கும் வகையில், (இன்று) சுய ஊரடங்கை கடைபிடித்து காலை 7 மணி முதல் இரவு 9  மணி வரை அத்தியாவசிய  தேவையின்றி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். காலை 7 மணி முதல் இரவு 9  மணி வரை சுய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். சுய ஊரடங்கு உத்தரவில் அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுய ஊரடங்கு மக்களின் இயக்கம் தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, கண்டிப்பாக  பின்பற்றுவதாக உறுதியளிக்கிறேன். எனது சக நாட்டு மக்களும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சங்கிலியை உடைத்து, சமூக தொந்தரவு மற்றும் சுய தனிமை மூலம் இந்த தொற்றுநோய்க்கு எதிராக நம் நாட்டைப் பாதுகாப்போம் என்று  தனடு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Tags : Self-Curfew ,Break the Chain and Protect Our Country ,Amit Shah People ,Breakthrough Chain ,Amit Shah ,Protecting Our Country , People's Self-Curfew Against Corona: Protecting our Country by Break the Chain and Self-Exclusion: Amit Shah
× RELATED சுய ஊரடங்கை முன்னிட்டு, சாலையோரம்...