×

சுய ஊரடங்கு அமல் எதிரொலி: வெறிச்சோடிய தமிழகம்...அம்மா உணவகம், மருந்தகம், ஆவின் பாலகங்கள் வழக்கம்போல் இயக்கம்

சென்னை: உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் நாடு முழுவதும் 335க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  நூற்றுக்கணக்கானவர்களுக்கு சந்தேகத்தின்பேரில் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். உலகளவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,025 உயர்ந்துள்ளது. உலகளவில்  கொரோனவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,06,892 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸை தடுக்கும் வகையில், (இன்று) சுய ஊரடங்கை கடைபிடித்து காலை 7 மணி முதல் இரவு 9  மணி வரை அத்தியாவசிய  தேவையின்றி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். காலை 7 மணி முதல் இரவு 9  மணி வரை சுய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். சுய ஊரடங்கு உத்தரவில் அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் பொது மக்கள் தேவைக்காக மருத்துவமனைகள், அம்மா உணவகம், மருந்தகம், ஆவின் பாலகங்கள், பெட்ரோல் நிலையம் உள்ளிட்டவை வழக்கம்போல்  இயங்குகின்றன. சமுதாய கூடங்களில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சி மட்டும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாத்துறை, காவல்துறை, ஊடகத்துறையை தவிர்த்து பெரும்பாலானோருக்கு இன்று விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது.

வெறிச்சோடிய சென்னை:

சுய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், சென்னையை பொருத்த வரை பெரும்பாலான இடங்கள் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடிய காணப்படுகிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படவில்லை.  சென்னை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான கோயில்கள், ஆலயங்கள், மசூதிகளில் இன்று பிராத்தனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் விட்டில் இருந்தப்படி பிராத்தனை  செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Ava ,Palace , Echoing the curfew in self-curfew: Mom's Restaurant, Pharmacy, Ava's Palace as usual
× RELATED சென்னையின் பல்வேறு பகுதிகளில் பால்...