×

இன்று மாலை 5 மணிக்கு சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்.க்கு வீட்டில் இருந்தபடியே எதிர்ப்பு: சிவில் சொசைட்டி அறிவிப்பு

புதுடெல்லி: சுகாதார பணியாளர்களுக்கு மக்கள் இன்று மாலை 5 மணிக்கு நன்றி தெரிவிக்கும்போது, சிஏஏ, என்ஆர்சி, எபிஆர்.க்கு எதிராக நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம் என வெறுப்புக்கு எதிரான ஒற்றுமை குழு என்ற சிவில் சொசைட்டி அமைப்பு கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கை குறித்து நாட்டு மக்களிடம் 2 நாட்களுக்கு முன் உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை வீட்டை விட்டு வெளியேறாமல் மக்கள் தாங்களாகவே ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் எனவும், கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ மணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 5 மணிக்கு, வீட்டு வாசலில், பால்கனியில் நின்று கைதட்ட வேண்டும், மணி அடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு வீட்டு வாசல் மற்றும் பால்கனியில் இருந்து சிஏஏ, என்ஆர்சி, எபிஆர் ஆகியவற்றுக்கு எதிராக பதாகைகளுடன் நின்று எதிர்ப்பு தெரிவிப்போம் என ‘வெறுப்புக்கு எதிரான ஒற்றுமை குழு’ என்ற சிவில் சொசைட்டி கூறியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த நதீம் கான் அளித்த பேட்டியில், ‘‘முதலில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்கும் எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு நன்றி தெரிவிப்போம். பிறகு சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்.க்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் எங்கள் வீட்டு ஜன்னல் மற்றும் பால்கனிகளில் இருந்தபடி எதிர்ப்பு தெரிவிப்போம். ஏப்ரல் 1ம் தேதி முதல் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசு வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை விடுப்போம்.

இன்று காலை முதல் மாலை வரை மக்கள் வீட்டுக்குள் இருக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி கலவரத்தில் வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள், முஸ்தபாபாத்தில் உள்ள சுகாதாரமற்ற நிவாரண முகாமில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு பிரதமர் மறுவாழ்வு அளிக்க வேண்டும்,’’ என்றார். சமூக ேசவகர் பர்வேஸ் ஆலம் என்பவர் கூறுகையில், ‘‘பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். மக்கள் ஊரடங்கை பின்பற்றுவோம். ஆனால், சிஏஏ, என்பிஆர்.க்கு எதிராக பாத்திரங்களை தட்டி எதிர்ப்பு தெரிவிப்போம்,’’ என்றார்.

Tags : home ,CAA ,Civil society announcement ,NPR ,NRC , CAA, NRC, NPR, Civil Society
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...