×

அனைத்து தொகுதிகளிலும் பாரபட்சமின்றி திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது: முதல்வர் பேச்சு

பேரவையில் நேற்று சமூகநலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அணைக்கட்டு நந்தகுமார் (திமுக) பேசியதாவது: தமிழகத்தில் 23% குழந்தைகள் எடை குறைவாக பிறந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதை தடுக்க வேண்டும். முதல்வர்: பிரசவ காலங்களில் தாய்மார்கள் இறப்பு குறைக்கப்பட்டு உள்ளது. 2030ம் ஆண்டு எட்ட வேண்டிய இலக்கை இப்போதே எட்டியுள்ளோம். நந்தகுமார்: தமிழகத்தில் பெரியார் சமத்துவபுரம் கலைஞர் ஆட்சியில் தொடங்கி வைத்தார். ஆனால் அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது.

முதல்வர்: திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம்தான் அது. திட்டமிட்டு செயல்படுத்தி இருக்க வேண்டும். நந்தகுமார்: வீடுகளுக்கு சுண்ணாம்பு அடிக்க கேட்கவில்லை. சாலை வசதி செய்து தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொகுதியில் இருப்பதால் புறக்கணிக்கிறீர்களா? முதல்வர்: நாங்கள் அப்படி பார்ப்பது இல்லை. குமரி மாவட்டத்தில் ஒரு தொகுதி கூட அதிமுக வெற்றிபெறவில்லை. ஆனால் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கிறோம். அதேபோன்றுதான் எல்லா தொகுதிகளிலும் பாரபட்சம் இன்றி திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Tags : constituencies , All volume, CM, speech
× RELATED யோகா செய்வதை கடைபிடியுங்கள்; ஊரடங்கு...