×

கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் முடியும் வரை தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என்று தமிழக தலைமை  செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள உமையாள் பரனாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சார்பில் சென்னை உயர்  நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த மனுவில், மேய்கால் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள தனது வீட்டை ஆக்கிரமிப்பு என்று கூறி அகற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று  கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் கிருஷ்ணன் சார்பில்  வக்கீல்கள் ஜெ.ரவீந்திரன், எம்.சினேகா ஆகியோர் முறையிட்டனர்.வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  மனுதாரரின் வீட்டை அகற்ற தடை விதிக்கப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து  அதிகரித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதால் இந்த வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புகள் ஏற்படலாம்.

எனவே, கொரொனா அச்சுறுத்தல் முடியும் வரை தமிழகம் முழுவும்  எந்த ஆக்கிரமிப்புகளையும் அதிகாரிகள் அகற்றக் கூடாது. இந்த வழக்கில் தலைமைச்  செயலாளரை இந்த நீதிமன்றம் தானாக முன்வந்து  பிரதிவாதியாக சேர்க்கிறது.  தலைமைச் செயலாளர் இந்த உத்தரவின் அடிப்படையில்  மாவட்ட  கலெக்டர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் வழக்கு ஏப்ரல் 6ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று  உத்தரவிட்டனர்.



Tags : High Court , Do not eliminate encroachments due to corona impact: High Court order to govt
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...