×

‘எனக்கு கொரோனாவா?’: விமான நிலையத்தில் மூதாட்டி ஆவேசம்

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்சில் வந்த விமான பயணிகளை  மருத்துவக்குழுவினர் பரிசோதனை நடத்தினர், அப்போது ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்ற 62 வயது பெண் சானடோரியத்தில் உள்ள சிறப்பு மருத்துவ பரிசோதனக்கு  செல்லும்படி கூறினர். இதனால் அந்த பெண் பயணி ஆவேசமடைந்து கூச்சலிட்டபடி, ‘‘நான் என்ன கொரோனா நோயாளியா? நான் முழு ஆரோக்கியமாக இருக்கிறேன். எனக்கு எந்த  நோயும் இல்லை. ஆஸ்திரேலியாவில் மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு தான் விமானத்தில் ஏறினேன். பின்பு என்னை சிங்கப்பூரிலும் பரிசோதனை செய்தனர். அனைத்து இடத்திலும் நார்மல் என்று கூறிவிட்டனர்.

ஆனால் நீங்கள் மட்டும் தான் நான் சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறீர்கள். நான் செல்ல முடியாது என்று ஆவேசமாக கூறினார். அதற்கு மருத்துவக்குழுவினர் ‘‘நாங்கள் எங்கள் கடமையைத்தான் செய்கிறோம். நாங்கள் உங்களை சானடோரியம் மருத்துவமனைக்கு அனுப்புகிறோம்.  நீங்கள் அதிகாரிகளிடம் உங்கள் நிலைமையை விவரமாக எடுத்துக்கூறிவிட்டுச் செல்லுங்கள். எங்கள் கையில் எதுவும் இல்லை. உங்களை சானடோரியம்  அனுப்புவது மட்டுமே எங்கள் வேலை’’ என்று கூறி அந்த பெண்மணியை சானடோரியத்தில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.



Tags : Corona ,airport , Why Coronava? Muthatti agitation at airport
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...