×

அரசு, தனியார் பஸ்களில் எச்சில் தொட்டு டிக்கெட் கொரோனா பரவும் அபாயம்: இடிஎம் மிஷினையே பயன்படுத்த கோரிக்கை

மதுரை: அரசு, தனியார் பஸ்களில் டிக்கெட் கிழிக்கும்போது எச்சில் படுவதால், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் இடிஎம் மிஷின்களை முழுமையாக பயன்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம், தனியார் தரப்பிலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களும், சுமார் 2 ஆயிரம் மினி பஸ்களும் மாநிலம் முழுவதும் இயக்கப்படுகின்றன. இவற்றில், 60 சதவீதம் பஸ்களில் இடிஎம் எனப்படும் மின்னணு டிக்கெட் இயந்திரம் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

40 சதவீத அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், மினிபஸ்களிலும் இன்னும் டிக்கெட் கிழித்து கொடுக்கும் நடைமுறையே தொடர்கிறது. ஒரு பயணிக்கு இரண்டு அல்லது மூன்றுவிதமான டிக்கெட்டுகள் கணக்கிட்டு வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை கிழிக்கும்போது, கண்டக்டர்கள் தங்களது எச்சிலை தொட்டு கிழிப்பது வழக்கம். தற்போது கொரோனா தொற்று நோய் அபாயம் அதிகரித்துள்ளதால் பஸ்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ேமற்கொள்ளப்பட்டுள்ளன. முதற்கட்டமாக அரசு, தனியார் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பஸ்களில் டிக்கெட் கிழித்து கொடுக்கும் போது ஒருவரது எச்சிலில் இருந்து மற்றவருக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே, டிக்கெட் புத்தகம் வழங்குவதை தவிர்த்து, இடிஎம் மிஷின்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என டாக்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags : government , Government, Private Bus, Ticket, Corona, ATM Machine
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...