×

வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய ஆர்.எஸ்.பாரதி மனு

சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பட்டியலின மக்கள் மற்றும் ஊடகங்கள் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பான புகாரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.பாரதி மீது தேனாம்பேட்டை காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்தது.இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், தான் பேசியது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகாது.

 நிகழ்ச்சி நடந்து ஒருமாதம் கழித்து காவல்நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு  காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த வழக்கை விசாரிக்க கோரி  நீதிபதி சதிஷ்குமார்  முன் திமுக வக்கீல் நீலகண்டன் அவசர முறையீடு செய்தார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கை மார்ச் 24ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தார்.

Tags : RS Bharati , RS Bharati plea to cancel rape case
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில்...