×

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு: நோயாளிகள் மீது ரத்தம் தெளித்த எச்ஐவி ஆசாமி

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் எச்ஐவி நோயாளி தனது ரத்தத்தை நோயாளிகள் மீது தெளித்து மிரட்டல் விடுத்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகே உள்ள ரெட்டாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (29). எச்.ஐ.வி. நோயாளியான இவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கடந்த 18ம் தேதி  உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தனக்கு எச்ஐவி இருப்பது தெரிந்தும் தினமும் வெளியில் சென்று மது குடித்துவிட்டு மருத்துவமனை வந்து விடுவார். நேற்றுமுன்தினம் இரவு அவர் குளுக்கோஸ் செலுத்துவதற்காக கையில் போட்டிருந்த ஊசியை கழற்றி, அதன்மூலம் வரும் ரத்தத்தை மற்ற நோயாளிகள் மீது தெளித்துள்ளார்.

மேலும் மருத்துவமனையில் வெளியில் உட்கார்ந்து இருந்த பொதுமக்கள் மீதும், எனக்கு மட்டும் எச்ஐவி இருந்தால் போதுமா உங்களுக்கும் வரவேண்டும் என சொல்லிக்கொண்டே அனைவர் மீதும் படும்படியாக தனது ரத்தத்தை தெளித்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து அங்கும் இங்குமாக ஓடினர். இதனால் போலீசார் அந்த நபரை மிரட்டி சமாதானப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். ஆனால் மீண்டும் அந்த நபர் தான் கையில் போடப்பட்டிருந்த ஊசியை பிடுங்கி மற்றவர்களின் கைகளில் குத்துவதற்காக அங்கும் இங்குமாக ஓடி அலைந்தார். இதனால் மருத்துவமனையில் பதற்றம் நீடித்தது. இதையடுத்து மீண்டும் போலீசார் வந்ததை அறிந்த அந்த நபர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம் பிடித்தார். அவரை பிடிப்பதற்கு காத்திருப்பதை அறிந்து மருத்துவமனைக்கு அவர் வரவில்லை.

Tags : Government Hospital ,HIV Assamy Government Hospital ,HIV Assamy , Infirmary, Government Hospital, HIV
× RELATED ஸ்டான்லி அரசு மருத்துவமனை நர்சுக்கு கொரோனா