×

முதல்வருக்கு பிரதமர் பாராட்டு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:பிரதமர் நரேந்திர மோடி நேற்று (21ம் தேதி) காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கொரோனா வைரஸ்  பரவுவதை தடுக்க தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனது  பாராட்டுக்களை தெரிவித்தார்.

அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்ததோடு, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை  மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள். மேலும், இன்று (22ம் தேதி) பிரதமர் அறிவித்த 9 அம்சங்களும் தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags : Prime Minister's praise for CM
× RELATED பாஜவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பிரதமருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து