×

மக்கள் ஊரடங்கு எதிரொலி: சென்ட்ரல், எழும்பூரில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து: ரயில்வே அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை மின்சார ரயில் மற்றும் பயணிகள் ரயில் என 64  ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, நெல்லை, பெங்களூர்,  மதுரை மற்றும் அனைத்து வெளிமாநில ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.இது குறித்து தெற்கு ரயில்ேவ வெளியிட்ட அறிக்கை: அரக்கோணம்- ஜோலார் பேட்டை, செங்கல்பட்டு-காச்சிகுடா, செங்கல்பட்டு- காக்கிநாடா, ஜோலார்பேட்டை- பெங்களூர் மெமோ, ஜோலார்பேட்டை- சென்ட்ரல்,  ஜோலார்பேட்டை- அரக்கோணம் ஆகிய ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.

மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 7 மணி முதல்  இரவு 9 மணிவரை ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம். அந்தமான் எக்ஸ்பிரஸ், மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ், நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்,  கோவை எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை சதாப்தி, விஜயவாடா ஜன்சதாப்தி, கேஎஸ்ஆர் பெங்களூரு டபுள்டக்கர், கேஎஸ்ஆர் பெங்களூர்  பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், நாகர்சோல் எக்ஸ்பிரஸ், மங்களூர் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ், தாதர் எக்ஸ்பிரஸ், மைசூர் எக்ஸ்பிரஸ்,  விஜயவாடாபினாங்கினி எக்ஸ்பிரஸ், திருப்தி சப்தகிரி எக்ஸ்பிரஸ், கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், குபாலி எக்ஸ்பிரஸ்,  திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்,  பெங்களூரு எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ்,

 ஐதராபாத் எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ், ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்ைட ஏலகிரி எக்ஸ்பிரஸ், ஐதராபாத் எக்ஸ்பிரஸ், நியூடெல்லி ஜிடி எக்ஸ்பிரஸ், அகமதாபாத் எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம் நீலகிரி  எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ், மைசூர் காவேரி எக்ஸ்பிரஸ், பாலக்காடு எக்ஸ்பிரஸ், நியூ டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், சந்திரகாச்சி எக்ஸ்பிரஸ்,  ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ், அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மெயில், மங்களூர் மெயில், ஆகிய ரயில்கள் ரத்து  செய்யப்படுகின்றன.

அதைப்போன்று எழும்பூரில் இருந்து இயக்கப்படும் ரயில்களான மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ், தாதர் எக்ஸ்பிரஸ், திருச்சி எக்ஸ்பிரஸ், குருவாயூர்  எக்ஸ்பிரஸ், மதுரை வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி பல்லவன், எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், ெகால்லம் மெயில், கன்னியாகுமரி  எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ், புதுச்சேரி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி பியர்ல்சிட்டி எக்ஸ்பிரஸ், நெல்லை  எக்ஸ்பிரஸ், செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ், மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், காரைக்குடி கம்பன் எக்ஸ்பிரஸ்,  கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுகிறது.

சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல்- சந்திரகாச்சி இடையே சிறப்பு ரயில் நாளை இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சந்திரகாச்சிக்கு  25ம் தேதி காலை 4.30 மணிக்கு சென்றடையும். அதைப் போன்று சந்திரகாச்சி- சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் 23 மற்றும் 25ம் தேதி பிற்பகல் 2.10  மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு 24, 26 மாலை 5.30 மணிக்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.


Tags : Central ,Egmore , Echoes of People's Curfew: All trains canceled from Central and Egmore
× RELATED எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...