×

பரிசோதனையில் அலட்சியம் கர்நாடக அதிகாரி சஸ்பெண்ட்

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் இதை கட்டுப்படுத்த மத்திய,  மாநில அரசுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போல்  அனைத்து பஸ், ரயில் நிலையங்களில் இதற்காக சிறப்பு முகாம்கள் அமைத்து  பயணிகளையும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்து வருகின்றனர்.  இதேேபால்,  துமகூரு ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளை பரிசோதனை செய்து சுகாதார துறை உதவி  அதிகாரி தலைமையில் சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிகாரி  நாற்காலியில் அமர்ந்தபடி, தெர்மல் ஸ்கிரீனர் கருவியை கையில் வைத்துக் கொண்டு, பயணிகளை பரிசோதனை செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்டார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் இவரை  தற்கால பணி நீக்கம் செய்து மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் சந்திரிகா  உத்தரவிட்டார்.

Tags : officer ,Karnataka , Inspection, Karnataka Officer, Suspend
× RELATED நித்திரவிளை அருகே அதிகாரிகள் அலட்சியத்தால் மின் கம்பத்துக்கு ஊன்று கோல்