×

காசர்கோட்டில் வைரஸ் ‘பரப்பிய’ நபர்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் காசர்கோடு மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா  பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. துபாயில் இருந்து வந்த ஒருவர் மூலம் இந்த நோய் பரவியுள்ளது.  இவர் ஊர் திரும்பியபின் பல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்த நபர் மங்களூருவில்  ரத்ததானம் பண்ணியதாகவும் கூறப்படுகிறது. அவர் ஏன் அங்கு ெசன்று ரத்த தானம் செய்தார் என்று சந்தேகம் எழுந்துள்ளது.  இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பலமுறை கேட்டும் அவர் பதில் அளிக்கவில்ைல. இவர் 3 ஆயிரத்திற்கு ேமற்பட்டவர்களுடன் தொடர்புக் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எங்கெல்லாம் சென்றார் என்பதையும் அவர் கூற மறுப்பதால் யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என்று கண்டறிவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவருடன் தொடர்பு வைத்திருந்த 20 பேர் கண்டுபிடிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

காசர்கோடு மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவியதை  அடுத்து மாவட்டம் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒருவாரம் அரசு  அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் வெளியூர்  செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டு சிறை: திருவனந்தபுரம் கலெக்டர்  கோபாலகிருஷ்ணன் விடுத்துள்ளஅறிக்கை: திருவனந்தபுரம் மாவட்டத்தில்  கொரோனா அறிகுறிகளுடன் கண்காணிப்பில் உள்ளவர்கள் வெளியே நடமாடவோ,  விதிகளை மீறவோ கூடாது. அப்படி செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை  தண்டனை கிடைக்கும். மாவட்டத்தில் வழிபாட்டுத்தலங்கள், திருவிழாக்கள்,  மாநாடு உட்பட எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் 50 பேருக்கு மேல்  கூடக்கூடாது. மார்ச் 1ம் தேதிக்கு பின்னர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் 14 அல்லது 28 நாட்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.  மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : Kasargod , Kerala, Corona
× RELATED கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில்...