×

இத்தாலியில் நடந்தது போல் இந்தியாவில் உயிரிழப்பு ஏற்பட கூடாது...நாளை பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க ரஜினி வேண்டுகோள்!

சென்னை:  சுய ஊரடங்குக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வீடியோ வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து பல்வேறு தரப்பில் இருந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சுய ஊரடங்குக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து வீடியோ பதிவில் அவர் தெரிவித்ததாவது, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அது மூன்றாம் இடத்திற்கு செல்ல கூடாது. வெளியில் மக்கள் நடமாடும் நிலையில் பரவக்கூடிய கொரோனா வைரஸ், 12 முதல் 13 மணி நேரம் பரவாமல் இருந்தாலே மூன்றாவது இடத்திற்கு செல்வதை தடுத்து விடலாம். அதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வருகின்ற 22ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனை போலவே இத்தாலியில் கொரோனா வைரஸ் இரண்டாம் இடத்தில் உள்ளபோது அங்குள்ள அரசாங்கம் மக்களை எச்சரித்தது. மேலும் ஊரடங்கு உத்தரவுக்கான அறிவிப்பினை வெளியிட்டது. ஆனால் அங்குள்ள மக்கள் அதனை துளியும் கருத்தில் கொள்ளாமல் உதாசினப்படுத்தினார்கள். ஆதலால் பலஆயிரம் உயிர்கள் பலியாகியது. அத்தகைய நிலைமை இந்தியாவில் நிகழக்கூடாது. எனவே இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் வருகின்ற 22ம் தேதி ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கவும், அதனை தடுப்பதற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அவர்களின் உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்காக, பிரதமர் மோடி அறிவுறுத்தியபடி 22ம் தேதி 5 மணிக்கு சேவைப் புரிந்தவர்களுக்கு மனதார பாராட்டுவோம் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டி கொள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Rajini ,Italy ,India ,home ,civilians , Italy, India, no death, Rajini, plea
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்