×

மக்கள் ஊரடங்கான நாளை கொரோனா பரவலை தடுக்க நாளை வீட்டிலேயே இருங்கள், தேவையற்ற பயணங்களை தவிருங்கள் : பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி : கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும்  நாளை சுய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டிருக்கின்றனர். மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவ்டிக்கைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதை மக்கள் பொழுது போக்கிற்கு செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் நாடுமுழுவதும் உள்ள சுற்றுலா தளங்கள் அடைக்கப்பட்டுள்ளன.

மோடி ட்வீட்

இந்நிலையில் பிரதமர் தனது ட்வீட்டர் பக்கத்தில், கொரோனா பரவலை தடுக்க நாளை வீட்டிலேயே இருக்க வேண்டும் .சுய ஊரடங்கான நாளை தேவையற்ற பயணங்கள் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உதவாது.
நாளை சுய ஊரடங்கின்போது வீட்டில் இருப்பது மட்டுமல்ல, உங்களது நகரத்திலும் இருப்பது அவசியம். வெளியூர் செல்லாமல் தங்கள் வசிக்கும் பகுதியிலேயே இருப்பதும் முக்கியம்.நெருக்கடி காலங்களில் ஒவ்வொரு சிறிய முயற்சியும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கொரோனா குறித்து யாரும் அச்சம் அடையாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா தடுப்பு குறித்த மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டிய நேரம் இது...!. தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்ட அனைவரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டுகிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

Tags : home ,Modi ,spread , Prime Minister Modi urges people to stay home and avoid unnecessary travel
× RELATED பெண்களின் தாலிக்கு ஆபத்து…...