×

பொன்னமராவதி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம்: பொதுமக்களின் சந்தேகங்களுக்கு வட்டார மருத்துவ டாக்டர் அருள்மணி விளக்கமளித்தார்

பொன்னமராவதி:  பொன்னமராவதி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. பொன்னமராவதி  பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு மற்றும் கை கழுவும் செயல் முறை விளக்கம் நடைபெற்றது. பொன்னமராவதியில் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி முன்னிலையில் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு கொரோனா வைரஸ்  விழிப்புணர்வு மற்றும் கை கழுவும் செயல் முறை விளக்கம் நடத்தப்பட்டது. இதில் வட்டார மருத்துவ டாக்டர் அருள்மணி நாகராஜன் பொதுமக்களிடம்  கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி உள்ளாட்சியின் பங்களிப்பு  சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பொது மக்களிடையே கருத்துகளை கேட்டறிந்தார். சுகாதார ஆய்வாளர் தியாகராஜன்  கொரோனா வைரஸ்சிலிருந்து தற்காத்துக் கொள்ள எவ்வாறு கை கழுவும், தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  

இவ்விழிப்புணர்வில் பேரூராட்சி பணியாளர் பாபு, துப்புரவு மேற்பார்வையாளர்கள் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட  ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொன்னமராவதி வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணிநாகராஜன் தலைமையில் பொன்னமராவதி பகுதியில்  மக்கள் அதிகமாக கூடும் இடங்களான ஜவுளிக்கடை, வங்கிகளில் மேற்கொள்ள வேண்டிய கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரசு போக்குவரத்து பணிமனையில் தொற்றுநீக்கம் செய்ய கைதெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளிக்கும்பணி  ஆகியவற்றை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் உத்தமன், தியாகராஜன் பங்கேற்றனர். பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்;டது. கொப்பனாபட்டி ஊராட்சியில் தலைவர் மேனகா தலைமையில்  கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Tags : area ,Ponnamaravati , Ponnamaravati, Corona, Virus, Prevention, Intensity, Dr.
× RELATED பொன்னமராவதியில் மின் சாதனங்கள் பழுது நீக்கும் கடையில் தீ